கோரக்பூர்: இணையத்தில் யூ ட்யூப் விடியோ பார்த்து தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொள்ள முயன்ற உத்தரபிரதேச இளம்பெண் ஒருவர் பரிதாப மரணம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல் தெரிவித்த கோரக்பூர் நிலையக் காவல் அதிகாரி ரவி ராய் கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த நான்கு வருடங்களாக கோரக்பூரில் தங்கி, அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார்.
அவர் சமீபத்தில் நானகைந்து நாட்களுக்கு முன்னதாக பிலாந்த்பூர் பகுதியில் புதிதாக அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் ஞாயிறு அன்று அவரது அறைக்கதவின் வழியாக ரத்தம் வழிந்து வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்துத் திறந்தனர்.
உள்ளே அந்த இளம்பெண்ணும் புதிதாகப் பிறந்த அவரது குழநதையும் பிணமாகக் கிடந்துள்ளனர். அருகில் கிடந்த அவரது அலைபேசியில், 'வீட்டில் தனியாக குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி?' என்னும் தலைப்பிலான விடியோ ஓடிக் கொண்டிருந்துள்ளது.
அவரது அலைபேசியில் கிடைத்த தொடர்பு எண்கள் மூலமாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகு, உடற்கூறாய்வுக்கு பிறகு திங்களன்று இளம்பெண்ணின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


