சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய வடிவில் வாட்ஸ்அப் மோசடி: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ

வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் சில விஷயங்கள், வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அக்கவுண்ட் எண்களை பெற்று மோசடி நடப்பதாக எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2019, 11:19 am

DIN


வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் சில விஷயங்கள், வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அக்கவுண்ட் எண்களை பெற்று மோசடி நடப்பதாக எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ இது குறித்து எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. 

அதாவது, வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை அளிக்குமாறு கூறி வாடிக்கையாளர்களுக்கு மோசடியான கோரிக்கைகள் வருவது குறித்து அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்ற தலைப்புடன் இருக்கும் அந்த செய்தியில், வாட்ஸ் அப் மற்றும் சமூக தளங்கள் வாயிலாக உங்களது அக்கவுண்ட் தகவல்களைப் பெற்று மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. 

உங்களுக்கு இதுபோன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக 1-800-111109 என்ற எண்ணுக்கு அழைத்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம்.

அதில்லாமல், மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு டெபிட் / கிரெடிட் கார்டு மதிப்பினைக் கூட்டித் தருவதாகக் கூறி தகவல்களைப் பெறுவார்கள். அதன் சிசிவி மற்றும் பயன்பாட்டுக் காலம் போன்றவற்றையும் கேட்டுப் பெற்று மோசடியில் ஈடுபடுவார்கள்.

சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வந்திருக்கும், அதனைக் கூறும்படி கேட்டு, டெபிட் / கிரெடிட் அட்டையில் இருக்கும் பணத்தை பறித்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.