மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர்: ராணுவம்

புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர் என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2019, 12:35 pm

PTI


ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர் என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா பேசுகையில், உயிரிழந்த ஷௌகத் அகமது நாயக், ராணுவத்தில் சேர்ந்தாரே தவிர, அவர் ராணுவ வீரராக பதவியேற்றுக் கொள்வில்லை.

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ராணுவ படைக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வாகி, ஜம்மு காஷ்மீரில் பயிற்சி முடித்தார். அதன்பிறகு செப்டம்பர் மாதம் அவர் விடுமுறையில் சென்று மீண்டும் பணியில் சேரவில்லை.

எனவே, அவர் செப்டம்பர் மாதமே ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.