மோசமான அரசுக்காக பயங்கரவாத தொழிற்சாலைகள் தயாராக உள்ளது: பிரதமர் மோடி
நாட்டின் மிகப்பெரிய சவாலாக பயங்கரவாதம் மட்டுமே உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நாட்டின் மிகப்பெரிய சவாலாக பயங்கரவாதம் மட்டுமே உள்ளது. சமீபத்தில் இலங்கையில் நடந்தது நாம் அனைவரும் அறிந்தது தான். இதே நிலை தான் இந்தியாவிலும் 2014-க்கு முன்பு இருந்தது. தினசரி இங்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வந்தன. அதுவே கடந்த 5 ஆண்டுகளாக அதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் பயங்கராவதம் முற்றிலும் ஒழிந்துவிட்டது என நாம் நினைக்க கூடாது. ஏனென்றால் நமது அண்டைப் பகுதிகளில் தான் பயங்கரவாத தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அவைகள் நம் நாட்டில் மோசமான ஆட்சியமைய காத்துக்கொண்டிருக்கின்றன. நமது பாதுகாப்பை குறைத்தால் பயங்கரவாதத்தால் ஏற்படும் அழிவு நிச்சயம். அதுதான் பயங்கரவாதத்தின் தாக்குதல் முறை. ஆனால், இது புதிய இந்தியா. நாம் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டோம். ஆனால், நம்மை யாராவது தொல்லை செய்தால் அவர்களை சும்மா விட மாட்டோம்.
பயங்கரவாதத்தை அதன் இடத்திலேயே எதிர்கொண்டு வெற்றிபெறுவதுதான் புதிய இந்தியாவின் சக்தியாகும். நமது நாடு பாதுகாப்பாக இருந்தால், நமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நமது நாடும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டியது மிக அவசியம். பயங்கரவாதிகள் நினைக்கும் மோசமான அரசை அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...