செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

ஃபானி புயலிலும் அரசியல் செய்கிறார் 'வேகத்தடை' முதல்வர்: மோடி குற்றச்சாட்டு

ஃபானி புயலை வைத்தும் மோசமான அரசியல் செய்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :6 மே 2019, 12:30 pm

PTI


ஃபானி புயலை வைத்தும் மோசமான அரசியல் செய்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, ஃபானி புயல் பாதித்த ஒடிஸாவை பார்வையிட்டு திரும்பியிருக்கிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனும் தொலைபேசியில் பேச விரும்பினேன். அதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் மமதை பிடித்த மம்தா பானர்ஜி பேசவில்லை. அவர் மீண்டும் எனக்கு போன் செய்வார் என்று நினைத்தேன். ஆனால் போன் செய்யவேயில்லை என்று மோடி கூறினார்.

மேலும், வேகத்தடையான மம்தா பானர்ஜி, மாநில மக்களின் நலனைக் காட்டிலும் அரசியல் செய்வதிலேயே அதிக அக்கறை காட்டுகிறார் என்று பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.