செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

56 இன்ச் 'பாக்ஸர்' மோடியின் 'பஞ்ச்' ஊழலை விடுத்து அத்வானியின் மீது தான் விழுந்தது: ராகுல் கிண்டல்

ராகுல் பிரசாரம் செய்யும் பிவானி தொகுதி நாட்டின் குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களை உருவாக்கும் இடமாகும். 

News image
Updated On :6 மே 2019, 10:16 am

PTI

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக அத்வானியை ஓரங்கட்டியதில் தான் இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்தார். இதுதொடர்பாக பிவானி தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின் போது ராகுல் பேசியதாவது:

நரேந்திர மோடி, 56 இன்ச் மார்ப்புடன் ஒரு குத்துச்சண்டை வீரராக விவசாயிகளின் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக போரிட களத்தில் இறங்கினார். அப்போது அவரது பயிற்சியாளர் அத்வானி மற்றும் நிதின் கட்கரி போன்ற அணி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

இந்நிலையில், மோடியும் அந்த குத்துச்சண்டை களத்தில் இறங்கிய உடன் அவரது முதல் குத்து (பஞ்ச்) மூத்த தலைவரான அத்வானியை அவமதிக்கும் விதமாக அவர் மீது தான் விழுந்தது. அதற்கடுத்த குத்துகளின் மூலம் சிறு, குறு வணிகர்களை (ஜிஎஸ்டி) ஒழித்துக்கட்டினார் என்று விமர்சித்தார்.

ராகுல் பிரசாரம் செய்யும் பிவானி தொகுதி நாட்டின் குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களை உருவாக்கும் இடமாகும். குறிப்பாக இந்தியாவில் குத்துச்சண்டை போட்டிகளில் உலகளவில் பல பதக்கங்கள் வென்று பெயர் பெற்ற விஜேந்தர் சிங் உள்ளிட்டோர் துவக்கம் முதல் பயிற்சி பெற்ற களமாகும். 

விஜேந்தர் சிங், தில்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்ப்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.