செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

ஒடிஸாவில் புயல் சேதங்களை பார்வையிட்டார் மோடி: கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு

ஃபானி புயல் புரட்டிப் போட்ட ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். 

News image
Updated On :6 மே 2019, 9:15 am

PTI


புவனேஸ்வர்: ஃபானி புயல் புரட்டிப் போட்ட ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். 

அதன் தொடர்ச்சியாக, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அம்மாநிலத்துக்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக  மத்திய அரசு அறிவித்தது.

ஃபானி புயல் தாக்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக பல லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றதற்காக நவீன் பட்நாயக் அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, ஒடிஸாவில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், பட்நாயக் தலைமையிலான அரசு மிகச் சிறப்பான முன்னெச்சரிக்கை பணிகளை செய்துள்ளது. இதனால் உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டது.

விரைவில் மத்தியக் குழு ஒடிஸாவுக்குச் சென்று சேதங்களை மதிப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். இதுபோன்ற மோசமான காலங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.