பத்மஸ்ரீ விருது பெற்ற ஜெர்மனியருக்கு விசா நீட்டிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்கம் விளக்கமளிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியுள்ளார்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரடெரிக் இரினா புரூனிங் (61). இவருக்கு பசு பாதுகாப்புக்காக பத்மஸ்ரீ விருது இந்தாண்டு வழங்கப்பட்டது. பிரடெரிக் இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்காக விசா நீட்டிப்பு வழங்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பத்தை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்ததுடன் பத்மஸ்ரீ விருது திரும்பப் பெறப்படும் என மிரட்டியுள்ளது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுஷ்மா வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், "இந்த விவகாரத்தை எனது கவனத்துக்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கு நன்றி. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 27! கே. பாக்யராஜ் மறைவு - நேரலை
காவிரி பழைய பாலம் மூடல்: பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

இராக்கை அபாரமாக வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது செனகல்!






