காங்கிரஸை வழிநடத்த ராகுல் காந்தி மீண்டும் சரியான நேரத்திற்கு வருவார் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஏ.கே. ஆண்டனி, 'காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைமை பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் சென்றுவிட்டார் என்ற வருத்தம் நம்மில் எவருக்கேனும் உள்ளதா? ஆனால், அவர் கண்டிப்பாக திரும்பி வருவார். மீண்டும் காங்கிரஸை வழிநடத்த சரியான நேரத்தில் வருவார்' என்று கூறினார்.
மேலும், ' காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. கட்சியின் முன்னாள் தலைவர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை பாஜக அரசு தவறாக விமர்சித்து வருகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், மோடி தலைமையிலான அரசாங்கத்தினைக் கைப்பற்ற, காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெற அவர் வருவார். பீனிக்ஸ் பறவையைப் போலவே, காங்கிரஸ் கட்சியும் திரும்பி வரும்' என்று பேசியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்

நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜிநாமா!

ஜன நாயகன் படத்தை வெளியிட மாட்டோம்! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு!

ஸ்ரீபெரும்புதூரின் சென்டிமென்ட் கை கொடுக்குமா? மக்கள் எதிர்பார்ப்பு என்ன?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


