கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட் கொலை மிரட்டல்
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


கோழிக்கோடு: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த மாதம் நான்கு மாவோயிஸ்ட்டுகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதேபோல் 2016-ஆம் ஆண்டு கேரள முதல்வராக விஜயன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இதுவரை ஏழு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கோழிக்கோடு அருகேயுள்ள வடகரா காவல் நிலையத்திற்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், மாவோயிஸ்ட நகர்ப்புற செயல் திட்டக் குழுவின் கபினிதல் பிரிவு துணைத்தலைவரான பேடர் மூஸா கையெழுத்திட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் ஏழு மாவோயிஸ்ட்டுகளின் மரணத்திற்கு காரணமான பினராயி விஜயனின் செய்கைக்கு உரிய தணடனை வழங்கப்படும் என்றும், மக்களை தவறாக நடத்தும் விதத்திற்காக பேரம்பரா காவல் நிலைய ஆய்வாளர் ஹரீஷிற்கும் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...