மாநிலங்களவை மார்ஷல்களின் சீருடையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
மாநிலங்களவையில், அவைத் தலைவருக்கு அருகே பாதுகாவலர்களைப் போல இரண்டு பேர் நிற்பார்கள். அவைத் தலைவரின் இடது புறம் இருப்பவர் மார்ஷல் என்றும், வலது புறம் நிற்பவர் துணை மார்ஷல் என்றும் அழைக்கப்படுவார். இவர்களது பணி, அவைத் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவையில் வரம்பு மீறும் உறுப்பினர்களை, அவைத் தலைவரின் உத்தரவை அடுத்து வெளியேற்றுவதும் ஆகும்.
இதுவரை இந்திய கலாசாரத்தின்படி, அவர்களுக்கு தலைப்பாகையுடன் சீருடை வழங்கப்பட்டிருந்தது.
இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் அவர்களது சீருடை மாற்றப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளைப் போன்று உடை மற்றும் தொப்பியும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என்ன.. சீருடையின் நிறம் மட்டும் ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கிறது.
மார்ஷல் பணி என்றால் சும்மா இல்லை..
மார்ஷல் பணிக்கு கடுமையான தேர்வுகள் நடைபெறும். நாடாளுமன்ற விதிகள், நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு தேர்வுகளுக்குப் பிறகே மார்ஷல்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


