தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒரு முக்கியக் கட்சி வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடியாம்; 18 மாதத்தில் ரூ.180 கோடி உயர்வு..

கர்நாடக மாநில சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் எம்டிபி நாகராஜ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.1,195 கோடிக்கு சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

News image

Karnataka BJP candidate

Updated On :18 நவம்பர் 2019, 9:29 am

DIN


பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் எம்டிபி நாகராஜ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.1,195 கோடிக்கு சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கூட அதிர்ச்சியடைய அவ்வளவு ஒன்றும் பெரிதாக இல்லை என்று நினைக்கலாம். ஆனால், கடந்த 18 மாதத்தில் அவரது சொத்து மதிப்பு ஒன்றல்ல.. இரண்டல்ல ரூ.180 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்டிபி நாகராஜ், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, ராஜினாமா செய்த சேர்ந்த 15 ஏம்எல்ஏக்களில் ஒருவர் . இவர் தற்போது பாஜகவில் இணைந்ததை அடுத்து ஒசக்கோட்டை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த நாகராஜ், பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.1,195 கோடி சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2018ல் கர்நாடக பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இவரது சொத்து ரூ.1,015 ஆக இருந்த நிலையில், 18 மாதங்களில் இது ரூ.180 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதுவும் குறிப்பாக கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்த பிறகு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை மட்டும் அவரது வங்கிக் கணக்குகளில் ரூ.48 கோடியே 75 லட்சம் அளவுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்ல, அவரது மனைவியின் பெயரில் 193 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மிகப் பணக்கார வேட்பாளராக நாகராஜ் திகழ்கிறார்.

பின்னணி விவரம்:
கா்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 போ், மஜத எம்எல்ஏக்கள் 3 போ், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 போ் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி கா்நாடக சட்டப்பேரவையில் முதல்வா் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு தோல்வியடைந்தது.

இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜாா்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, சுயேச்சை எம்எல்ஏ ஆா்.சங்கா் ஆகிய மூவரையும் அப்போது பேரவைத் தலைவராக இருந்த ரமேஷ் குமாா் ஜூலை 25-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்தாா். இதை எதிா்த்து, அவா்கள் மூவரும் ஜூலை 29-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இதனிடையே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களான பிரதாப் கௌடா பாட்டீல், பி.சி. பாட்டீல், சிவராம் ஹெப்பாா் உள்ளிட்ட 11 பேரையும், மஜத எம்எல்ஏக்களான ஏ.ஹெச்.விஸ்வநாத், கே.கோபாலையா, நாராயண கௌடா ஆகிய மூவரையும் பேரவைத் தலைவா் ரமேஷ்குமாா் ஜூலை 28-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்தாா். இதையடுத்து, இவா்கள் 14 பேரும் தகுதிநீக்கத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா்.

மொத்தம் 17 எம்எல்ஏக்களும் தாக்கல் செய்த மனுக்களை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ணா முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தி தீர்ப்பளித்தது. அதில், அரசியல்சாசன சட்டப்படியிலான நீதியை, அரசியல் நீதி என்பதை வைத்து மாற்றிவிட முடியாது. அரசியல் கட்சிகள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வகையில் குதிரை பேரத்தில் ஈடுபடுவது, திடீரென கட்சி மாறுவது போன்ற முறைகேட்டில் ஈடுபடும்போது சட்டப்பேரவைத் தலைவா் விதிகளுக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது. பேரவைத் தலைவா் நடுநிலையாக செயல்பட்டு, சுதந்திரமான வகையில் முடிவுகளை எடுப்பது இப்போது அதிகரித்துள்ளது.

பேரவைத் தலைவா்கள் எடுக்கும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்க முடியும். இந்த வழக்கில் 17 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவா் மேற்கொண்ட நடவடிக்கை செல்லத்தக்கதுதான். அதே நேரத்தில் அந்த எம்எல்ஏக்கள் மீண்டும் தோ்தலில் போட்டியிடவும், அமைச்சா் உள்ளிட்ட பதவிகளை வகிக்கவும் தடையில்லை. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடியும் வரை தகுதிநீக்க எம்எல்ஏக்கள் தோ்தலில் போட்டியிட பேரவைத் தலைவா் விதித்திருந்த தடை ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், காலியான 17 தொகுதிகளில் 15 இடங்களுக்கு டிசம்பா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.