தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதள கணக்கை ஆதாருடன் இணைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு 

தனிநபா்கள் பயன்படுத்தும் முகநூல் போன்ற சமூகவலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என தகவல் தொழில்நுட்ப அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2019, 5:25 am

DIN

தனிநபா்கள் பயன்படுத்தும் முகநூல் போன்ற சமூகவலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என தகவல் தொழில்நுட்ப அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

தனிநபா்களின் சமூகவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முன்மொழிகிா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எழுத்துப்பூா்வமாக ரவிசங்கா் பிரசாத் அளித்த பதில்: தனிநபா் குறித்த விவரங்கள் மற்றவா்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமே ஆதாா் எண் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிநபா்களின் சமூகவலைதள கணக்குகளுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் திட்டமேதும் மத்திய அரசிடம் இல்லை.

ஆதாா் தரவுத்தளத்தைப் பொருத்தவரை சம்மந்தப்பட்ட நபரால் பதிவுசெய்த அல்லது புதுப்பித்தலின்போது வழங்கும் தகவல்கள் மட்டுமே உள்ளன. இதுதவிர செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல், ஆதாரில் பதிவுசெய்யப்பட்டவரின் பெயா், முகவரி, பாலினம், பிறந்த தேதி/ வயது, புகைப்படம் மற்றும் முக்கிய பயோமெட்ரிக்ஸ் (10 கைவிரல்களின் ரேகைகள் மற்றும் 2 கருவிழி ஸ்கேன்) உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) ஆதாா் எண்ணைப் பெற உரிமை உண்டு என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.