மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை செவ்வாயன்று ராஜிநாமா செய்த அஜித் பவார் மீண்டும் என்.சி.பி சட்டமன்ற குழுத் தலைவராகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி அரசியல் திருப்பங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தலையீட்டின் எதிரொலியாக மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) அஜித் பவார் செவ்வாயன்று ராஜிநாமா செய்தார். அவரது நெருங்கிய உறவினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெடர்ந்து சந்தித்து பேசியதே அதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது.
குடும்பத்தினர் சார்பாக தரப்பட்ட உணர்வுபூர்வமான அழுத்தமும் இதில் முக்கியப் பங்கு வகித்தது. அதன் காரணமாக அஜித் பவார் தான் ராஜிநாமா செய்வதற்கு முன்பாக புதன் காலையில் மும்பை நட்சத்திர விடுதி ஒன்றிலும், பின்னர் இரவு சரத் பவரின் வீட்டிலும் அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. என்.சி.பி கட்சித் தலைவர்களும் அஜித்தின் செயல்பாடுகளுக்காக அவரை மன்னிக்க வேண்டும் என்று சரத் பவாரிடம் வேண்டுகோள் வைத்திருந்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை செவ்வாயன்று ராஜிநாமா செய்த அஜித் பவார் மீண்டும் என்.சி.பி சட்டமன்ற குழுத் தலைவராகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதன் காலை நடைபெற்ற மகாராஷ்டிரா புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவிலும் அஜித் பவார் கலந்து கொண்டார். அவரை சரத் பவரின் மகளான சுப்ரியா சுலே மகிழ்ச்சியுடன் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியிலும் குடும்பத்திற்குள்ளும் ஏற்பட்ட சமாதானத்திற்கு பரிசாக அஜித் பவாருக்கு மீண்டும் என்.சி.பி சட்டமன்ற குழுத் தலைவராக தலைவர் பதவி வழங்கபபடலாம் என்று தகவல்கள் வந்துள்ளது.
அதேசமயம் அவருக்கு அமைச்சர் பதவியோ அல்லது துணை முதல்வர் பதவியோ வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


