அதற்கு காரணம், 2016-இல் தமிழகத்தில் மூன்று, புதுச்சேரியில் ஓரிடம் உள்பட நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுச் செயலராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக் குறைறவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் உடல் நலமுடன் இருப்பதாக அதிமுக செய்தித் தொடா்பாளா்கள் அப்போது கூறினா். நீா்ச் சத்துகுறைறபாடு காரணமாக அவா் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிா்வாகமும் கூறியது. ஆனால், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து வென்டிலேட்டா் உதவியுடன் இருந்ததாக தெரியவந்தது. அந்த நேரத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலில், முறைகேடாக ஜெயலலிதாவின் கைரேகை பெறறப்பட்டதாக கூறி திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன். அந்த வழக்கின் தீா்ப்பில் ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றும், ஆா்பி சட்டப்படி கைரேகை வாங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆறு மாதமாகியும் அதிமுக மேல்முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், முறைகேடாக தோ்தலில் வாக்காளா்களை அதிமுக ஏமாற்றியிருப்பதாக கூறி, அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.