அடுத்தது கோட்சேவுக்கு பாரத ரத்னா கோருவார்கள்: பாஜக மீது டி. ராஜா சாடல்

வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைத்துள்ள பாஜக, அடுத்தது கோட்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு கோரிக்கை வைப்பார்கள் என்று டி. ராஜா விமரிசித்துள்ளார்கள்.
அடுத்தது கோட்சேவுக்கு பாரத ரத்னா கோருவார்கள்: பாஜக மீது டி. ராஜா சாடல்


வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைத்துள்ள பாஜக, அடுத்தது கோட்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு கோரிக்கை வைப்பார்கள் என்று டி. ராஜா விமரிசித்துள்ளார்கள்.

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அக்டோபர் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் வீர் சாவர்க்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவிக்கையில், 

"நாம் அனைவரும் காந்தியின் நூற்றாண்டைக் கொண்டாடி வருகிறோம். இந்தத் தருணத்தில் காந்தியின் படுகொலை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீர் சாவரக்கருக்கு பாஜக பாரத ரத்னா விருதைக் கோருகிறது. இதுதான் நமது காலத்தின் மிகப் பெரிய நகைமுரண். காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு பாஜக பாரத விருதைக் கோரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது அவர்களுடைய செயல்திட்டத்தின் ஒரு அங்கமாகும். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 16 இடங்களில் போட்டியிடுகிறது. எங்களது பிரதான நோக்கமே பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வீழ்த்துவதுதான். மற்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இதர எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் முறையிடுவோம்" என்றார். 

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய டி. ராஜா, "பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பாஜகவின் மற்ற மூத்த தலைவர்கள் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது போன்ற விவகாரங்களைக் குறித்து மட்டுமே பேசுகின்றனர். விவசாயிகளின் பிரச்னைகள், பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி மற்றும் வேலையிழப்புகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மௌனம் காக்கின்றனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com