மகாராஷ்டிரம், ஹரியாணா பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 51 பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.


மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 51 பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
.jpg)
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்துச் செல்கின்றனர்.

மாகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது வாக்கை பதிவு செய்தார். ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் கர்னலில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

பாந்த்ரா, பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் தங்கள் வாக்கைச் செலுத்தி வருகின்றனர்.

மும்பையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அவரது மனைவி காஞ்சன், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அவரது மனைவி வாக்களித்தனர்.

அதுமட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித், லாரா தத்தா மற்றும் அவரது கணவரும் பிரபல டென்னிஸ் வீரருமான மகேஷ் பூபதி, ஜெனிலியா மற்றும் அவரது கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 45 சதவீதம் மற்றும் ஹரியாணாவில் 55 சதவீதம் வாக்குப் பதிவாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...