நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகாராஷ்டிர, ஹரியாணா தேர்தல் முடிவுகள்: மௌனம் காக்கும் ராகுல் காந்தி!

மகாராஷ்டிர, ஹரியாணா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 

News image
Updated On :25 அக்டோபர் 2019, 8:01 am

Muthumari

மகாராஷ்டிர, ஹரியாணா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது அக்கட்சியினர் மத்தியிலே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

மகாராஷ்டிரத்திலும், ஹரியாணாவிலும் கடந்த 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா  கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. ஹரியாணாவில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஹரியாணாவின் அடுத்த முதல்வரைத் தேர்வு செய்வதில் துஷ்யந்த் செளதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.

இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியும் ஆன ராகுல் காந்தி இதுவரை எந்த கருத்தையுமே தெரிவிக்கவில்லை.   

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் கூட, கட்சி குறித்த எந்த முன்னேற்ற நடவடிக்கைகளையும் தலைவர் எடுக்கவில்லை என அரசியல் வட்டாரத்தில் பொதுவாக பேசப்படுகிறது. 

இந்நிலையில், சோனியா காந்தியாவது கட்சியின் மூத்தத் தலைவரான பூபிந்தர் சிங் ஹூடேவுடன் ஹரியாணா தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்துள்ளார். அதேபோன்று தேர்தல் முடிவுகள் சற்று மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது காங்கிரஸ் கட்சியினர்  ஒரு சில மூத்த தலைவர்கள் மத்தியிலே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.