தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஹரியாணா முதல்வராக மனோகர் லால் கட்டர் நாளை பதவியேற்பு

ஹரியாணா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டர் தொடர்ந்து 2-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார்.

News image
Updated On :26 அக்டோபர் 2019, 7:45 am

DIN

ஹரியாணா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டர் தொடர்ந்து 2-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார்.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு 6 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. 

முதல்வரை முறைப்படி தோ்வு செய்வதற்காக, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மனோகா்லால் கட்டா் தோ்ந்தெடுக்கப்படார். அவரது தலைமையில் தொடர்ந்து 2-ஆவது முறையாக ஹரியாணாவில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய பாா்வையாளராக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பாஜக பொதுச் செயலா் அருண் சிங் ஆகியோா் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யாவை மனோகா் லால் கட்டரைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோருவாா் என்று தெரிவித்தார். 

இதையடுத்து ஹரியாணா முதல்வராக 2-ஆவது முறையாக மனோகர் லால் கட்டர், தீபாவளித் திருநாளான ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கூட்டணிக் கட்சியான ஜேஜேபி தலைவா் துஷ்யந்த் சௌதாலாவுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.