ரிசர்வ் வங்கி பொது மேலாளர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை
ரிசர்வ் வங்கியின் குவாஹட்டி கிளையின் பொது மேலாளர் ஆஷிஷ் ரஞ்சன் சாமல், ஒடிஸாவின் ஜாஜ்பூரிலுள்ள விடுதி அறையில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டார்.


ரிசர்வ் வங்கியின் குவாஹட்டி கிளையின் பொது மேலாளர் ஆஷிஷ் ரஞ்சன் சாமல், ஒடிஸாவின் ஜாஜ்பூரிலுள்ள விடுதி அறையில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டார்.
ஜெய்ப்பூர் மாவட்டம் நரஹரிபூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஷிஷ், தற்கொலை தொடர்பாக பாரசானா காவல்நியைத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு தனது சொந்த கிராமத்துக்கு வருகை தந்த ஆஷிஷ், தனது தாயை சந்தித்துச் சென்றுள்ளார். பின்னர் புவனேஸ்வர் சென்று மனைவியை சந்தித்துள்ளார். அவருடைய மனைவி கலிங்கா மருத்துவப் பல்கலை.யில் மருத்துவராக உள்ளார். ஒரே மகன் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் வெள்ளிக்கிழமை காலை பராமரிப்பாளர் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் ஆஷிஷ் திறக்காததால், சந்தேகமடைந்து போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் விடுதிக்கு வந்து பார்த்தபோது, அறையிலுள்ள மின்விசிறியில் ஆஷிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...