பப்ஜி கேம் விளையாடாதே என்று சொன்ன தந்தையின் தலையை வெட்டிய மகன்!

'PUBG' என்ற மொபைல் கேம் விளையாடுவதைத் தடுத்த காரணத்தால் கோபம் தலைகேறிய 21 வயது இளைஞன்
பப்ஜி கேம் விளையாடாதே என்று சொன்ன தந்தையின் தலையை வெட்டிய மகன்!
Updated on
2 min read

'PUBG' என்ற மொபைல் கேம் விளையாடுவதைத் தடுத்த காரணத்தால் கோபம் தலைகேறிய 21 வயது இளைஞன் ஒருவன் தனது தந்தையைக் கொடூரமாகத் தாக்கி, கொலை செய்துள்ளான். குற்றம் சாட்டப்பட்டவர் அவரது தந்தையின் தலை, கை மற்றும் காலை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை பெலகாவியின் ககாட்டி கிராமத்தில் உள்ள சித்தேஷ்வர் எனும் ஊரில் நடந்துள்ளது. உயிரிழந்தவர் அக்கிராமத்தில் வசிக்கும் சங்கர் தேவப்ப கும்பர் (61).

இறந்தவரின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட ரகுவீர், ஒரு பாலிடெக்னிக் மாணவன் என்றும் தேர்வுகளில் பலமுறை தோல்வியடைந்துள்ளான் என்றும் கூறினர்.

சங்கர் தேவப்ப கும்பர்
சங்கர் தேவப்ப கும்பர்

மொபைல் ஃபோன் விளையாட்டுகளுக்கு அடிமையானதுடன், போதைப் பொருள் விற்பனையிலும் மகன் சம்பந்தப்பட்டுள்ளதாக ரகுவீரின் பெற்றோர் சந்தேகப்பட்டனர்.  அது குறித்து மகனை அடிக்கடி கண்டித்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கரிடம் ரகுவீர் பணம் தருமாறு கேட்டுள்ளான். ஆனால் பணம் தர மறுத்துவிட்டார் சங்கர். அதனால் கோபமடைந்த ரகுவீர் வீட்டில் கலாட்டா செய்தான். ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு ஜன்னலையும் உடைத்தான். அக்கம்பக்கத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் ரகுவீரை கைது செய்து ககாட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இப்படி அடிக்கடி பக்கத்து வீட்டினருக்கு தொல்லைகளை தந்ததால், ரகுவீர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் எச்சரித்தனர். அச்சமயம் சங்கர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட ஆயுதப்படைகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் ஷங்கர். ரகுவீரை போலீஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்பு தன் பங்கிற்கு அடித்துக் கண்டிருத்திருக்கிறார் ஷங்கர்.

PUBG Game
PUBG Game

திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், ரகுவீர் தனது மொபைல் தொலைபேசியில் PUBG விளையாடுவதை பார்த்தார் சங்கர். உடனே எரிச்சலடைந்த அவர், தனது படுக்கையறையிலிருந்து வெளியே வந்து ரகுவீரிடமிருந்து மொபைல் போனைப் பறித்தார். அதனால் ஆத்திரமடைந்த ரகுவீர் சங்கரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குச் சென்று, அங்கிருந்த தந்தையை ஒரு அரிவாளால் வெட்டினார். பின்னர், பின்பு அவரது கால்களில் ஒன்றையும் வெட்டினார் ரகுவீர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரகுவீரை கைது செய்தனர். வெறி அடங்காத நிலையில் ரகுவீர், தந்தையின் உடலை இன்னும் முழுமையாக வெட்டவில்லை, சிறிது நேரம் காத்திருக்குமாறு போலீசாரிடம் கூறியிருக்கிறார்.

ககாட்டி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி போலீஸ் கமிஷனர் (ஏ.சி.பி) சிவா ரெட்டி அளித்த தகவல், 'குற்றம் சாட்டப்பட்ட ரகுவீர் மொபைல் கேம் விளையாட்டுக்கு மிக மோசமாக அடிமையாகி இருந்தான். அதிலும் குறிப்பாக PUBG எனும் கேமை தனது மொபைல் ஃபோனில் அடிக்கடி விளையாடியுள்ளான். மேலும் திங்கள்கிழமை அதிகாலை அந்த விளையாட்டை விளையாடியதற்காக அவனது தந்தை கண்டித்த போது, கடும் கோபமடைந்துள்ளான் ரகுவீர். தந்தை என்றும் பாராமல், அறிவு மழுங்கிய நிலையில் ரகுவீர் சங்கரைக் கடுமையாகத் தாக்கி, அறிவாளால் தலை மற்றும் காலை வெட்டினான்’ என்றார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com