
ஆப்பிள் ஐஃபோன்களின் புதிய வருகையான ஐஃபோன்-11, ஐஃபோன் 11 ப்ரோ, ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவை செப்டம்பர் 27ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.64,900 முதல் தொடங்குகிறது.
இதன் காரணமாக, க்யூப்பர்டினோவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் தனது பழைய ஐஃபோன் மாடல்களின் விலையை இந்தியாவில் குறைக்க முடிவெடுத்துள்ளது. ஐஃபோன்-7 தற்போது ரூ.29,900க்கு விற்பனையாகி வருகிறது.
இதுவரை தயாரித்ததிலேயே அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஐஃபோன்-11 ப்ரோ, ஐஃபோன்-11 ப்ரோ மேக்ஸ் செல்போன்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (சர்வதேச சந்தைப் பிரிவு) பில் ஷில்லர் தெரிவித்துள்ளார்.
ஐஃபோன்-11 விலை ரூ.64,900ல் இருந்தும், ஐஃபோன்-11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவை முறையே ரூ.99,900 மற்றும் ரூ.1,09,900ல் இருந்தும் விற்பனைக்கு வருகிறது.
புதிய வருகைகளின் காரணமாக செப்டம்பர் 27ம் தேதிக்குப் பிறகு தற்போது விற்பனையில் இருக்கும் ஐஃபோன்களின் விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.