வலிமையான இந்தியாவை உருவாக்குவதே பிரதமரின் குறிக்கோள்: மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

வலிமையான இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் மோடியின் குறிக்கோள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் வி.சாந்தாவுக்கு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்குகிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் வி.சாந்தாவுக்கு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்குகிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்.


வலிமையான இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் மோடியின் குறிக்கோள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
  காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் 35-ஆவது  பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.  விழாவுக்கு பல்கலை. வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்தார். துணைவேந்தர்(பொ) எம்.சுந்தரவடிவேலு, பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறப்பு அழைப்பாளராக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பங்கேற்று, பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்தும், பரிசுத் தொகை வழங்கியும் பேசியது: 
நம் நாட்டின் அடையாளமே கிராமங்கள்தான். கிராமங்கள் வளர்ச்சிப் பெற்று, கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றமடையாமல், நாடு வளர்ச்சிப் பெற்றுவிட்டதாக கூற முடியாது. அதேபோல் பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் பெறும் வகையில், திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 
  ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வாய்மையின் வழியில் நடத்தி வருகிறது. காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, வலிமையான இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் மோடியின் குறிக்கோள் என்றார். 
விழாவில் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் வி.சாந்தா, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு அளித்த சேவையை பாராட்டும் வகையில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.  மேலும், முனைவர், இளநிலை, முதுநிலை, பட்டம் மற்றும் பட்டயம் என 1,125 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 
முன்னதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் எழுதிய 2 புத்தகங்களின் மொழிப் பெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. அதேபோல் காந்தி கிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் நீர் மோலாண்மை திட்டம் மற்றும் சூரிய ஆற்றல்  திட்டங்களை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com