ஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்த்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் 100% லேண்ட்லைன் நெட்ஒர்க் செயல்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அன்றைய தினம் முதல் காஷ்மீரில் அனைத்துப் பகுதிகளிலும் நெட்ஒர்க் சேவை துண்டிக்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு மேலாகியும், காஷ்மீரில் மொபைல் நெட்ஒர்க் சேவை வழங்காததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, மத்திய அரசு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காஷ்மீரில் மீண்டும் நெட்ஒர்க் சேவையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஜம்மு காஷ்மீரில் 10% மொபைல் போன்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், அதே நேரத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் நெட்ஒர்க் 100% செயல்பாட்டில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மொபைல் மற்றும் லேண்ட்லைன் சேவை மட்டுமின்றி பேருந்து சேவைகள் கூட இங்கு பல பகுதிகளில் இல்லை என காஷ்மீர் மக்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


