யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கயவன் கமல்; ஊளையிடும் ஸ்டாலின்: சுப்பிரமண்ய சுவாமியின் 'சுளீர்' ட்வீட்

கமலும் ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஹிந்தி எதிர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமண்ய சுவாமி
Updated On :16 செப்டம்பர் 2019, 12:04 pm

DIN

சென்னை: கமலும் ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஹிந்தி எதிர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீவிரமாக விமர்சித்திருந்தார்.

அதேசமயம் நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா’வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று மத்திய பாஜக அரசை மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றின் மூலம் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கமலும் ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஹிந்தி எதிர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கயவன் கமல் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் ஹிந்தித் திணிப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்பிக்க கூடாது என்று  அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது? முதலில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் கொடுக்கலாம். எதைத் தேர்வு செய்து கொள்வது என்பது மாணவர்களின் முடிவாக இருக்கட்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.