மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு 

விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image

ஆர்.கே.எஸ்.பதாரியா

Updated On :19 செப்டம்பர் 2019, 12:19 pm

புது தில்லி: விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது விமானப்படை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா விரைவில் ஓய்வு பெற உள்ளார். எனவே புதிய தளபதியைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது 

இந்நிலையில் விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது விமானப்படையின் துணை தளபதியாக பணியாற்றி வரும் பதாரியா, 1990 ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்த்தவராவார்.

அடுத்த மாதம் விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ள சூழல், பாகிஸ்தானுடனான உறவில் விரிசல் ஆகிய சந்தர்ப்பத்தில் புதிய தளபதியின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.