ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு

அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே விதமான அடையாள ஆவணமோ அல்லது அட்டையோ தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார். 

News image
ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு
Updated On :23 செப்டம்பர் 2019, 8:53 am

DIN

அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே விதமான அடையாள ஆவணமோ அல்லது அட்டையோ தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தான் அரசின் பயன்கள் அனைத்தும் கொண்டு சேர்க்க முடியும். எனவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. எனவே 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு மிகப்பெரிய பணியாக இருக்கப்போகிறது. 

2021-க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பானது காகித முறையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும். மொபைல் செயலி மூலம் கணக்கெடுக்கப்பு நடத்தப்பட போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தகவல்கள் சரியான முறையில் தானாக தகவல்கள் சேகரிக்கும் விதமாக அமைக்கப்படும். இதற்காக ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது.

140 ஆண்டு வரலாற்றில் இவ்வாறு நடைபெறவுள்ளது இதுவே முதன்முறையாகும். ஒவ்வொருவரின் மொபைல் உதவியுடன் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனால் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும்.

இதன்மூலம் ஒவ்வொரு தனிநபரின் பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு இருக்கும்.

அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவைப்படுகிறது. அதற்கு இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை மூலம் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.