தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிறையில் இருக்கும் லாலுவுக்கு சோதனை மேல் சோதனை..!

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா, தனது மாமியார் ராப்ரி தேவி மற்றும் கணவரின் சகோதரி மிசா பாரதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

News image
Updated On :30 செப்டம்பர் 2019, 8:31 am

DIN

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா, தனது மாமியார் ராப்ரி தேவி மற்றும் கணவரின் சகோதரி மிசா பாரதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேடு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். கால்நடை மாட்டுத்தீவன நான்கு வழக்குகளில் அவர் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். மேலும் ஒரு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், அவரது குடும்பத்தில் நேற்று ஒரு விரிசல் வெடித்தது. லாலுவின் மருமகள் ஐஸ்வர்யா, திடீரென லாலுவின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மாமியார் ராப்ரி தேவி மற்றும் கணவரின் சகோதரி மிசா பாரதி இருவரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கடந்த 3 மாதங்களாக தனது வீட்டில் சாப்பாடு கூட வழங்குவதில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

Story image

மேலும், 'நேற்று மாலை முதல் சமையலறையை பூட்டி வைத்துள்ளனர். சாவி எங்கே என்று கேட்டால் என்னை மிரட்டுகிறார்கள;. துன்புறுத்துகிறார்கள். எனது கணவருடன் வாழ்வது மிசா பாரதிக்கு பிடிக்கவில்லை. எங்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், நான் எனது கணவரின் வீட்டிலேயே வசித்து வருகிறேன். ஆனால், விவாகரத்து கிடைத்து விட்டது போல மிசா பாரதி என்னை நடத்துகிறார். எனக்கும், எனது கணவர் தேஜ் பிரதாப்-க்கும் இடையே விரிசல் ஏற்படக் காரணமாக இருப்பவர் மிசா பாரதி தான்' என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

ஐஸ்வர்யா, தனது வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவரது தந்தையும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் மூத்தத் தலைவருமான சந்திரிகா ராயும் அங்கு வந்தார். அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டது. பின்னர், காவல்துறை அவ்விடத்திற்கு விரைந்த நிலையில் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ராப்ரி தேவி மற்றும் மிசா பாரதியிடமும் விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்தார். 

இதன்பின்னர், காவல்துறையின் உதவியோடு இன்று ஐஸ்வர்யா, லாலுவின் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. லாலு ஏற்கனவே சிறையில் இருந்து வரும் நிலையில், குடும்பத்தில் பிரச்னை கிளம்பியுள்ளது அவருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.