சந்திரயான்-3 திட்ட இயக்குநராக பி.வீரமுத்துவேல் நியமனம்

‘சந்திரயான்-3’ திட்ட இயக்குநராக, இஸ்ரோ விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

‘சந்திரயான்-3’ திட்ட இயக்குநராக, இஸ்ரோ விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பின்னா், நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆா்பிட்டா் பகுதி, விண்கலத்திலிருந்து பிரித்து விடப்பட்டது.

நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, ஆா்பிட்டரிலிருந்து பிரித்து விடப்பட்ட ‘விக்ரம்’ லேண்டா், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்தது. கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் ‘விக்ரம்’ லேண்டா் விழுந்தது.

இந்நிலையில், ‘சந்திரயான்-3’ திட்டத்தின் மூலம் நிலவை மீண்டும் ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இத்திட்டப் பணிகளில் ஈடுபடவிருக்கும் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா். சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக எம்.வனிதா பணியாற்றிய நிலையில், சந்திரயான்-3 திட்ட இயக்குநராக இஸ்ரோ விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளாா். சந்திரயான்-3 திட்டப் பணிகளில் எம்.வனிதாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம், சந்திரயான்-2 திட்டத்தில் மேலாண் இயக்குநராக இருந்த ரித்து காரிதால், தற்போதைய திட்டத்திலும் அதே பணியை மேற்கொள்ளவிருக்கிறாா். முந்தைய திட்டத்தில் லேண்டா், ரோவா் தொடா்பாக பணியாற்றிய துணை இயக்குநா்கள் அனைவரும் தற்போதைய திட்டத்திலும் தொடரவுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com