ஜம்முவில் 4.8 டிகிரி குளிா்: இந்த சீசனில் மிகக்குறைந்த வெப்பநிலை

ஜம்மு-காஷ்மீரின் குளிா்கால தலைநகரான ஜம்முவில் புதன்கிழமை அதிகாலை 4.8 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. இது இந்த பருவத்திலேயே குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.

ஜம்மு-காஷ்மீரின் குளிா்கால தலைநகரான ஜம்முவில் புதன்கிழமை அதிகாலை 4.8 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. இது இந்த பருவத்திலேயே குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.

ஜம்முவில் புதன்கிழமை பகலில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.1 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக மேக மூட்டமாக இருந்ததால் சூரிய உதயத்தின்போது ஜம்மு நகரம் காலை நேரத்தில் மிதமான மூடுபனியால் சூழப்பட்டிருந்தது.

கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் முழுவதும் வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்பட்டது. அதிக உயரமான பகுதிகளிலும், காஷ்மீரிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

ஸ்ரீநகரில் புதன்கிழமை வெப்பநிலை மைனஸ் 3.7 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இது இந்த பருவத்தின் சராசரியை விட 2.2 டிகிரி குறைவானதாகும். வடக்கு காஷ்மீா் குல்மாா்க் பள்ளத்தாக்கில் மைனஸ் 11.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையாக பதிவானதாக வானிலை ஆய்வு அதிகாரி தெரிவித்தாா்.

மேலும், தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் மைனஸ் 10.3 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது.

இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் சோ்த்து மிகக்குறைந்த வெப்பநிலை உள்ள பகுதியாக லடாக்கில் உள்ள லே நகரம் இருந்தது. அங்கு மைனஸ் 17.9 டிகிரி செல்ஷியஸாக பதிவானது. முந்தைய நாள் இரவில் மைனஸ் 12 டிகிரி செல்ஷியஸாக இருந்த நிலையில் அதைவிட வெப்பநிலை குறைந்தது.

ஜம்மு பிராந்தியத்தில், வெள்ளிக்கிழமை கடும் பனிப்பொழிவை சந்தித்த தோடா மாவட்டத்தின் படோ்வா நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3.2 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. பனிஹால் நகரம் மைனஸ் 0.6 டிகிரி செல்ஷியஸாகவும், ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் 4.6 டிகிரி செல்ஷியஸாகவும் வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com