

அயோத்தி வழக்கின் தீர்ப்பில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கி வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பினை வாசித்து வருகிறார். தீர்ப்பில், 'அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்துக் கொடுத்தது தவறு; சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலே இருக்க வேண்டும்.
மசூதி கட்டுவதற்கு இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும். வக்பு வாரியம் விரும்பும் இடத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், 3 மாதத்திற்குள் இந்தத் தீர்ப்பை மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் செயல்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.