கரோனா எதிரொலி: ஏர் இந்தியா நிறுவனத்தில் 200 விமானிகள் வேலை இழப்பு
ஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 200 விமானிகளின் ஒப்பந்தங்களை ஏர் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


ஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 200 விமானிகளின் ஒப்பந்தங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
கரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம், 20 விமானிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. கடந்த சில வாரங்களில் நிறுவனத்தின் வருவாய் மிகவும் சரிந்துள்ளதால் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 200 விமானிகளின் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று மூத்த அதிகாரி தெரிவித்தார். முன்னதாக கேபின் குழுவினர் தவிர அனைத்து ஊழியர்களுக்கும் கொடுப்பனவு தொகையை நிறுவனம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...