காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆந்திரத்தில் கரோனாவுக்கு முதல் பலி

ஆந்திரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் பலி நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :3 ஏப்ரல் 2020, 12:22 pm

DIN

ஆந்திரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் பலி நிகழ்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் தழுவிய 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. எனினும் அம்மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. 

இங்கு கரோனாவுக்கு இதுவரை 132 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.  இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் முறையாக ஒருவர் பலியாகியுள்ளார். கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 55 வயதுடைய நபர் கடந்த 30-ஆம் தேதி இறந்தார். 

அவரது இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது அவர் கரோனா வைரசால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 17ஆம் தேதி தில்லியில் இருந்து விஜயவாடா திரும்பிய பலியான நபரின் மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.