சத்தீஸ்கர்: இரட்டைக் குழந்தைக்கு கரோனா, கொவைட் எனப் பெயரிட்ட பெற்றோர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைக்கு கரோனா, கொவைட் எனப் பெயரிட்டுள்ளனர் அவர்களது பெற்றோர்.


சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கரோனா, கொவைட் எனப் பெயரிட்டுள்ளனர்.
மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 200 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்நிலையில், ராய்பூரைச் சேர்ந்த 27 வயதுள்ள ப்ரீத்தி வர்மா என்ற பெண்ணுக்கு டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் நினைவக மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதி இரவு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து குழந்தையின் தாய் கூறுகையில்,
ஊரடங்கு உத்தரவால் பல சிரமங்களை எதிர்கொண்டேன். போக்குவரத்து வசதியில்லாததால் உறவினர்கள் யாரும் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளித்ததில் நல்ல முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தேன்.
பல சிரமங்களுக்கு மத்தியில் அழகான இரட்டைக் குழந்தை பிறந்ததால் தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு கொவைட் என்றும், பெண் குழந்தைக்கு கரோனா என்றும் பெயரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஏற்கெனவே 2 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...