அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் சிறைகளில் இருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் சிறைகளில் இருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :7 ஏப்ரல் 2020, 3:51 pm

புது தில்லி: ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் சிறைகளில் இருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான அமித் சானி மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால், பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க சிறைகளில் உள்ள ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தீவிர நோய் பாதிப்பிற்கு உள்ளனவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வின் முன் செவ்வாயன்று விசாரனைக்கு வந்தது.

அப்போது இந்த மனுவின் மீது பொதுவாக எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்து விட்ட நீதிமன்றமானது, இம்மனு மீது மாநில அரசுகள் மற்றும் சிறை நிர்வாகங்கள், தங்கள் முன் சமர்பிக்கப்படும் தனித்தனியான மனுக்கள் மீது உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.