அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்யுங்கள்: மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்யுங்கள்: மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்
Updated on
1 min read

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்தல் போன்றவற்றை தடுத்து, பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் அதனை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் போக்குவரத்து உள்ளிட்ட பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பலரும் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது, பதுக்குதல் போன்றவற்றால், விலை உயர்வு அடையும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், அதனை உற்று கவனித்து, அதுபோன்ற நடவடிக்கைகளை முற்றிலும் களையும் பணியையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

எனவே, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அனைத்தும், தத்தமது பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவுக்கு கையிருப்பில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பொருட்களை பதுக்குதல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். அவ்வாறு ஈடுபடுவோர் மீது 7 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவோரை மாநில அரசுகள் கைது செய்து, அவர்கள் மீது வழக்குத் தொடரவும் அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய உள்துறை வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com