ஜார்க்கண்டில் 72 வயது முதியவர் கரோனாவுக்கு முதல் பலி!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
போகாரோ மாவட்டத்தில் 72 வயதான முதியவர் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்கையில், அவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.
கரோனா சிறப்பு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாகத் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் குமார் பதக் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், இது முதல் பலி ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...