எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஒடிஸா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 12:21 pm

DIN

ஒடிஸா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற மே 1-ஆம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக ஒடிஸாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கரோனாவுக்கு இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் பலியாகினர். 

அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 4 பேர் குணமடைந்தனர். கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கடந்த மாதம் 24-ஆம் தேதி பிரதமா் மோடி தேசிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டாா். இதன்படி 21 நாள்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.