அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 12:33 pm

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது. 

ராஜஸ்தானில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டோங்க் பகுதியில் 45 பேருக்கும், ஜோத்பூரில் 43 பேருக்கும், பன்ஸ்வாரா பகுதியில் 37 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேப்போல, ஜெய்ப்பூரில்தான் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.