அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கரோனா: மும்பை தாராவி பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை தொடக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கேச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 12:41 pm


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.

தாராவியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு காரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், தாராவியைச் சேர்ந்த 80 வயது முதியவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணம் அடைந்தார். இதன் மூலம் இதுவரை தாராவியில் கரோனாவுக்கு நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தாராவி பகுதி முழுவதும் முடக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியில் 150 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.