இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

உத்தரப் பிரதேசம்: சாலையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த கர்ப்பிணி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே..

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 7:27 am

PTI


ஷாஜகான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தையைப் பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரகுநாத்பூர் கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாகப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், அந்த பெண்ணின் கணவர் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்னாபூர் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார். 

இந்த தம்பதியினர் கிட்டத்தட்ட 5 கி.மீட்டர் வரை பயணம் செய்து சிக்கந்தர்பூர் கிராசிங் அருகே வந்தபோது, அந்த பெண்ணிற்குப் பிரசவ வலி அதிகரித்தது. சாலையிலேயே அந்த பெண் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாக அக்கிராமத்தின் தலைமைக் காவலர் அபர்ணா கௌதம் தெரிவித்துள்ளார். 

கிராமத்தின் அருகில் வயலில் வேலைச் செய்யும் தோமர் என்ற பெண் அந்த பெண்ணிற்கு உதவி செய்துள்ளார். பின்னர், காவல் பாதுகாப்பு வாகனத்தின் மூலம் அந்த பெண்ணை சுகாதார மையத்திற்குக் கொண்டுபோய் சேர்த்தனர். தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவி வழங்கப்பட்டு, தற்போது இருவரும் நலமாக உள்ளதாகத் தலைமைக் காவலர் தெரிவித்தார். 

பெண்ணிற்கு உதவிசெய்த தோமருக்கு பாராட்டுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.