மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா பாதிப்பு
மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 909 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. 716 பேர் குணமடைந்த நிலையில் 273 பேர் பலியாகியுள்ளனர். கரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலமே முதல் இடம் வகிக்கிறது.
அங்கு 1700-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகர்கள் அதிகம் வசிக்கும் நெருக்கடி மிகுந்த மும்பை தாராவி பகுதியில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் தாராவியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ள. மேலும் பலி எண்ணிக்கை 4 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...