இந்தியாவில் கரோனா பாதிப்பு 9,152 ஆக உயர்வு
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது.
இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 273-லிருந்து 308 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 716-லிருந்து 857 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரம் 1,985, தமிழகம் 1,075, தில்லி 1,154, ராஜஸ்தான் 804, மத்தியப் பிரதேசம் 562, தெலங்கானா 531, கேரளம் 375, ஆந்திரம் 427, குஜராத் 516, கர்நாடகம் 232 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...