நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.
இதற்கிடையே, ராஜஸ்தானில், ஒரு பெண் பிளாஸ்டிக் பைகளில் துப்பி, அதனை வீடுகளுக்குள் வீசிச் செல்லும் சிசிடிவி கேமரா பதிவு காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் வல்லப்வாடி பகுதியில், ஒரு பெண்மணி, பிளாஸ்டிக் கவர்களில் துப்பி, அதனை வீடுகளுக்குள் வீசி எறியும் சிசிடிவி கேமரா பதிவைப் பார்த்த காவல்துறையினர், உடனடியாக அப்பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினர். குற்றம் இழைத்த பெண்மணியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுவிடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டிவிட்டது. உயிரிழப்பு 300 ஆக இருக்கும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில விஷமிகளின் இதுபோன்ற செயல்களால், மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


