47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு 120 பேர் பாதிப்பு, 7 பேர் பலி: மாநில சுகாதாரத்துறை

மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு இதுவரை 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :14 ஏப்ரல் 2020, 4:05 pm

DIN

மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு இதுவரை 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸால் இந்தியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு இதுவரை 120 பேர் பாதிக்கப்பட்டிருப்பததோடு 7 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் மாநிலத்தில் இதுவரை 3081 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதேசமயம் 439 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.