மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 13,835; பலி 452 ஆக உயர்வு: சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,835 ஆகவும் பலி எண்ணிக்கை 452 ஆகவும் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 12:45 pm

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,835 ஆகவும் பலி எண்ணிக்கை 452 ஆகவும் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,767 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரமே முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,205 ஆகவும் உயிரிழப்பு 194 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 300 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

தொடர்ந்து தில்லியில் 1,640 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,308 பேரும், தமிழகத்தில் 1,267 பேரும், ராஜஸ்தானில் 1,131  பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.