சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும்: மத்திய அரசு 

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 3:53 pm

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேமசயம் 20ஆம் தேதி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.