இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 991 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 991 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 991 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 991 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1992 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,323 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 201 பேர் பலியாகியுள்ளனர். தில்லியில் 1707 பேரும், தமிழகத்தில், 1323 பேர், ம.பி.,யில் 1310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...