மத்தியப் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு
மத்தியப் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.


மத்தியப் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து அம்மாநில முதல்வராக சிவராஜ் சிங் சௌஹான் மார்ச் 23ஆம் தேதி பதவியேற்றார்.
மறுநாளே நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அமைச்சர்கள் யாரும் அப்போது பதவியேற்கவில்லை. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா் லால்ஜி டாண்டன், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதன்படி பாஜகவை சேர்ந்த நரோதம் மிஸ்ரா, கமல் பட்டேல், மீனா சிங், துளசி சிலவத் மற்றும் கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...