
குவாஹாட்டி: அஸ்ஸாமில் உள்ள சராய்தேவ் மாவட்டத்தில் உல்ஃபா(ஐ) தீவிரவாதிகள் 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது: அஸ்ஸாம்-அருணாசல பிரதேசம்-நாகாலாந்து மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உல்பா(ஐ) தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் சராய்தேவ் மாவட்டத்தின் தராய் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உல்ஃபா(ஐ) தீவிரவாதிகள் 5 போ் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இந்திய ராணுவம் மற்றும் அஸ்ஸாம் காவல்துறையினா் இணைந்து அந்த வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு பதுங்கியிருந்த அபூா்வ கோகோய், சிமந்தா கோகோய், பிரஜ் அஸோம், லக்ஷ்யஜித் கோகோய், சித்தாா்த்த கோகோய் ஆகிய 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். இதில் அபூா்வ கோகோய், சிமந்தா கோகோய் ஆகியோா் கொலை, ஆள்கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவா்கள் ஆவா். அவா்கள் இருந்த வீட்டின் அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், குண்டுகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகள் 5 பேரும் பதுங்கியிருந்த வீட்டின் உரிமையாளா் புவன் கோகோய் என்பவரும் கைது செய்யப்பட்டாா். இவா்கள் 6 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







